தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடிப் படகுகளில் வாக்காளர் விழிப்புணர்வு அணி வகுப்பு செய்த மீனவர்கள்

ராமநாதபுரம்: பாம்பன் கடலில் மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு அணி வகுப்பை மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

By

Published : Mar 16, 2021, 2:12 PM IST

மீன்பிடி படகுகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய மீனவர்கள்
மீன்பிடி படகுகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய மீனவர்கள்

எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவினை வலியுறுத்தும்விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனிச் சிறப்புகளில் ஒன்றான பாம்பன்
பாலத்தில், மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாம்பன் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ‘100 சதவிகிதம் வாக்களிப்போம்’ என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து, பாம்பன் பாலத்தின் வடகடல் பகுதியிலிருந்து தென்கடல் பகுதிக்கு சுமார் 500 மீ. தூரத்திற்கு பயணம் செய்தனர்.

மீன்பிடி படகுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மீனவர்கள்

அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், பாம்பன் பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் வழங்கினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details