தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசின் திட்ட நகலை கிழித்த மீனவர்கள்..!

ராமநாதபுரம்: தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கடலோர மண்டல மேலாண்மை அறிக்கை 2019 ரத்து செய்யக் கோரி  ஏஐடியுசி சார்பில் அறிக்கை நகலை கிழித்து தூக்கிவீசிவிட்டு கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர்கள்

By

Published : Aug 23, 2019, 6:10 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், அக்னி தீர்த்தகரையில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி மீன்பிடி தொழிலாளர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கடலோர மண்டல மேலாண்மை அறிக்கை 2019யை ரத்து செய்ய வலியுறுத்தியும், கடலோரப் பகுதியை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை கைவிட வேண்டும், மீன் கருவாடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து, மத்திய அரசின் திட்ட நகலை கிழித்து தூக்கிவீசிவிட்டு கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் திட்ட நகலை கிழித்த மீனவர்கள்

இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசு, புதிய சட்டத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details