தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலுக்குச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயமானதையடுத்து மீனவரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Fisherman missing in mandapam
Fisherman missing in mandapam

By

Published : Mar 23, 2021, 3:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையிலிருந்து நேற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அனுமதி மீன்பிடி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் உச்சப்புளியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான TN 11 MM257 என்கிற படகில் நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அப்போது, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது படகில் இருந்த மீனவர் கார்மேகம் (55) கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார். இதையடுத்து சக மீனவர்கள் இரவு முழுவதும் தேடி மீனவர் கிடைக்காததால் மண்டபம் மீன்வளத் துறை அலுவலர்கள் மீனவரைத் தேடி தரக்கோரி படகு உரிமையாளர் மனு அளித்தார்.

மீன்வளத் துறை அலுவலர்கள் கடலோரக் காவல்படை, மரைன் காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details