ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி(தனி) முதுகுளத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. இங்குள்ள ஆயிரத்து 647 வாக்குப் பதிவு மையங்களில் மாலை 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, நான்கு தொகுதியிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், அண்ணா பல்கலைக் கழக அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது.
ராமநாதபுரம்: பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சீல்
ராமநாதபுரத்தில் வாக்கு பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக் கழக அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது.
அப்போது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 309 மத்திய துணை ராணுவ படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள காவலர்கள் மூன்றாகப் பிரிந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு பதிவு இயந்திரம் இருக்கும் இடத்தில் 110க்கு மேல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு குறித்து ஜோதிமணி எம்பி கேள்வி