தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கொட லொக்காவுடன் தொடர்பா? - சிங்கள காவலர் பிரவின் குமாரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

ராமநாதபுரம்: இலங்கை காவலர் பிரவின் குமாரை தனுஷ்கோடி அழைத்துச் சென்று சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

cbcid_enquiry_srilankan_police_at_dhanush_kodi
cbcid_enquiry_srilankan_police_at_dhanush_kodi

By

Published : Sep 21, 2020, 2:18 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 5ஆம் தேதி தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு காவல் துறையினரால் இலங்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலர் பிரவின் குமார் பண்டாரா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கும் தமிழ்நாட்டில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவுக்கும் போதைப் பொருள் விற்பனை செய்வதில் தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அவரை 5 நாள்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 17ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தலைமையில் வந்த காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சிங்கள காவலர் பிரவின் குமாரை நேரில் அழைத்து வந்து தனுஷ்கோடி பாலம் பகுதியில் உள்ள மீனவர்களிடம் விசாரணையில் நடத்தினர்.

இந்த விசாரணை முடிந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவருக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தேர்தல் முடிந்தாலும், அடுத்தது திமுக ஆட்சிதான் என்று ஸ்டாலின் கூறிக்கொண்டே இருப்பார்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details