புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து விஜயேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் விஜயேந்திரன், ராமு, சின்னையன், ஜேசு உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்கும் செயலில் ஈடுபட்டதாக மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஐந்து மீனவர்களையும் கைது செய்தனர்.
மீண்டும் இலங்கை அட்டூழியம் - எல்லை தாண்டி மீன்பிடித்தாக 5 தமிழர்களுக்குச் சிறை!
புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ஐந்து மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
fishermen arrested
பின்னர், விசாரணைக்காக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த பின், இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் மீனவர்களை அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.