புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயல் பகுதியில் பருவமழைக்கு முன்னதாக பெய்த மழையில் விவசாயம் செய்துள்ளனர். தற்பொழுது விளைந்து இன்னும் சில தினங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக சுமார் 100 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து முளைத்த நிலையில் உள்ளது.
தொடர் மழை: விளைந்தும் பயன் இல்லாமல் போன நெற்கதிர்கள்!
புதுக்கோட்டை: தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, விளைந்த நெற்பயிர்கள் அனைத்தும் அழுகிய நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனையடந்துள்ளனர்.
paddy
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘இந்த பகுதி காவிரி டெல்டா பகுதி. இந்தாண்டு ஆற்றில் வந்த நீரினை நம்பி விவசாயம் செய்தோம். ஆனால் தொடர் மழையின் காரணமாக விளைந்த நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து முளைத்த நிலையில் உள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.