புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் 8 லட்சம் பேர் உயிரிழந்தனர் ஆயிரம் பேர் இறந்துள்ளனர் எனக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் அவரிடம் திருத்தி கூறினர். இருப்பினும், அவர் மீண்டும் ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று கூறியது, குழப்பத்தை ஏற்படுத்தியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு விமர்சனங்களை முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவித விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வைக்காமல் ஸ்டாலின் சென்றது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின், "முகக்கவசம் ரூ.4 மதிப்பில் இருப்பதை இந்த அதிமுக அரசு ரூ.30 என கணக்கு காட்டியுள்ளது. இதை, திமுக ஆட்சிக்கு வந்தததும் சும்மா விடமாட்டோம். கரோனா காலத்தில் மாஸ்க் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடரில்கூட கொள்ளையடித்த ஆட்சிதான் இது. நம்ம ஊருக்கு கரோனா வராது எனக் கூறியவர் விஜயபாஸ்கர். ஆனால், தற்போது 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு பலியாகிவுள்ளனர். கரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே நகர் தேர்தலுக்கு பின் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு நடக்கும்போது, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கார் ஓட்டுனர் ஆவணங்களை வீட்டிற்கு வெளியே கொண்டு போட்டுள்ளார். திமுக ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்தது உண்மைதான். ஆனால், அதனை நாங்கள் கட்டுக்குள் வைத்திருந்தோம்.