தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை பொது மக்களிடம் நம்பிக்கை அளித்துள்ளது’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை பொது மக்களிடம் நம்பிக்கை அளித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

By

Published : Jan 3, 2021, 11:28 AM IST

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்நாடு முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் விரும்புகின்ற ஆட்சியாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, கரோனாவை கட்டுப்படுத்தியது, பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கியது, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றியது, 2000 மினி கிளினிக் தொடங்கியது ஆகியவை பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

உலகத்தில் உள்ள வல்லரசு நாடுகளே பாராட்டும் வகையில் கரோனாவை நாம் கட்டுப்படுத்தி உள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். தடுப்பூசி பணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மிகச்சிறந்த திட்டமிடலை கையாண்டு வருகிறார். தடுப்பூசி எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட உள்ளது. நேற்று (டிச. 2) 17 மாவட்டங்களில் தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கொடுக்கும் பூர்வாங்கப் பணி தொடங்கிவிட்டது” என்றார். மேலும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான டெண்டர் முடிவு செய்யப்பட்டு விட்டது. திட்டமிட்டபடி ஜனவரி மாதத்திற்குள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'வடகலை, தென்கலை பிரிவினர் கோயிலில் வாதங்கள் செய்யக்கூடாது' - இந்து அறநிலையத்துறை

ABOUT THE AUTHOR

...view details