உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.
பெண்கள் உடல், மனநலம் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தப் போட்டியின் நோக்கம். போட்டியில், 150-க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவிகள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.