தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரத்தப் பரிமாற்றம்: புதுக்கோட்டையில் பயனடைந்த 6,695 பேர்!

புதுக்கோட்டை: ரத்தப் பரிமாற்று சிகிச்சையால் 6,695 நபர்கள் பயனடைந்தனர் என மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Medical College Principal Meenakshi Sundaram Press Meet
Medical College Principal Meenakshi Sundaram Press Meet

By

Published : Jun 17, 2020, 1:19 AM IST

உலகெங்கிலும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்தக் கொடையாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதையொட்டி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் , 'கடந்த ஓராண்டில் 48 ரத்த தான முகாம்கள், நடத்தப்பட்டு 1,897 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

ரத்த வங்கியில் 1,707 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மொத்தமாக சேகரிக்கப்பட்ட இந்த 3,604 யூனிட் ரத்தத்தினால் 6,695 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

எவ்வாறு எனில், ரத்தத்தை பகுப்பாய்வு செய்து, அதன் அலகுகளான சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள், பிளாஸ்மா போன்றவை பல்வேறு நபர்களுக்குச் செலுத்தப்பட்டன.

அந்த வகையில் முழு ரத்தமானது 1,010 நபர்களுக்கும், சிவப்பணுக்கள் 2,907 நபர்களுக்கும், தட்டை அணுக்கள் 728 நபர்களுக்கும், பிளாஸ்மா 2,056 நபர்களுக்கும் செலுத்தப்பட்டது.

விபத்துகளில் காயம் அடைந்து ரத்த இழந்தவர்களுக்கும், மகப்பேறு மருத்துவத்தில் பிரசவ காலங்களில் ஏற்படுகின்ற, ரத்தப் போக்கில் இருந்தும் தாய்மார்களை காப்பாற்றுவதற்கு ரத்ததானம் தேவைப்படுகிறது.

எனவே, தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தக் கொடையாளர்கள் வெளிநோயாளர் பிரிவிலும், ஆய்வகத்திலும் முன்னுரிமை பெறுவதற்காக பிரத்யேக வெளிநோயாளர் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன' என்றார்.

இந்நிகழ்ச்சியில், ரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக 158 முறை ரத்த தானம் செய்த கண்ணன் பாராட்டப்பட்டார். மருத்துவ மாணவர்கள் 15 பேர் ரத்த தானம் செய்தனர்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை - உறவினர்கள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details