புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற 4 ஆண்டு புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவருடனான நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது, ‘ ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் முடிவெடுத்தாரோ அதுபோல குடியுரிமை சட்டத்திற்கும் விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். முதலமைச்சர் நிச்சயம் அதனை செய்வார்.
கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோது, எங்களுக்கு போட்டியாக வருவார்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் அவரது கட்சியான மக்கள் நீதி மய்யம் அரசியல் களத்தில், தேர்தல் போட்டிக்கே வரவில்லை. இப்போது ரஜினி எங்களுக்கு போட்டியாக வருவார் என்று சொல்கிறார்கள்.
நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி. ரஜினி முதலில் அரசியல் கட்சி தொடங்கட்டும், மக்களை எதிர்கொள்ளட்டும், தேர்தலை சந்திக்கட்டும். அதன் பிறகு எங்களுக்கு போட்டியாக வருவாரா அல்லது மாட்டாரா என்று சொல்கிறோம்.
அதிமுகவின் அரசின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடுகள் சிறப்பான ஒன்றாகவே தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது. சிறப்பான வழியில் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
ஜிஎஸ்டி மூலம் வரவேண்டிய 6,000 கோடி ரூபாய் போன்றவை மத்திய அரசிடமிருந்து நமக்கு வர வேண்டியுள்ளது. நிதி சரியாக வரவர அனைத்து திட்டங்களும் விரைந்து முடிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களைப் பயிற்றுவிக்க மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி, இணையதள வழி கல்வி என பல தடங்கள் இருக்கின்றன. இந்தியாவிலேயே 14 அம்ச கல்விக் கொள்கையை கொண்டு வந்தது தமிழ்நாடு தான். மாணவர்களின் எதிர்காலத்திற்காக கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கையை, மக்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். 'புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு திணிப்பாக இருக்கக் கூடாது, இனிப்பாக இருக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க :'ரஜினிக்கு செல்வாக்கு இருப்பதால் விமர்சனத்திற்கு ஆளாகிறார்' - செ.கு. தமிழரசன்