தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2020, 8:38 PM IST

ETV Bharat / state

மருத்துவமனையில் தகவலை பரிமாற வாக்கி டாக்கி - மாவட்ட மருத்துவமனை முதல்வர் தகவல்

புதுக்கோட்டை: நோயாளிகளுக்கும் செவிலியர்களுக்கும் இடையே தகவலை பரிமாற வாக்கி டாக்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தகவலை பரிமாற வாக்கி டாக்கி
மருத்துவமனையில் தகவலை பரிமாற வாக்கி டாக்கி

புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில் கரோனாவிற்கு தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு தளங்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நோயாளிகளுக்கும் செவிலியர்களுக்கும் இடையே தகவலை பரிமாற்றிக் கொள்ள கடினமாக இருந்து வந்தது.

இதை சரி செய்வதற்காக நான்கு வாக்கி டாக்கிகள் மருத்துவமனைக்கு வழங்க காவல்துறை திட்டமிட்டது. இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நான்கு வாக்கி டாக்கிகளை மாவட்ட மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கினார்.

அதனை பெற்றுக் கொண்ட பின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தகவல் தொடர்பு இந்தப் பேரிடர் காலத்தில் இன்றியமையாதது. வாக்கி டாக்கிகளின் மூலம் இனி நோயாளிகள், செவிலியர்கள் எளிதாக தகவல்களை பரிமாற முடியும்.

கூடிய விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவிட்-19 சிகிச்சை : வீடு திரும்பிய 3 முதியவர்கள் - அரசு மருத்துவமனை சாதனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details