தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரஜினி என் நண்பர்; அவரிடம் ஆதரவு கோருவேன்'- கமல்ஹாசன்

என் நெருங்கிய நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal haasan about rajinikanth statement
kamal haasan about rajinikanth statement

By

Published : Dec 30, 2020, 4:59 PM IST

புதுக்கோட்டை: தேர்தல் பரப்புரைக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்.

ரஜினி நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன். நண்பர் என்பதால் தேர்தலில் ஆதரவு கோருவேன். ரஜினியின் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றமா என்ற கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை.

ஆன்மிகத்திற்கும், எனக்கும் விரோதம் கிடையாது. ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. நான் நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன்” என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

நேற்று (டிச., 29), சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த ரஜினிகாந்த், உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அரசியல் களத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

ஆனாலும் அரசியலுக்கு வராமலே, மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details