தமிழ்நாடு

tamil nadu

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு கலைவிழா

By

Published : Mar 8, 2020, 3:01 PM IST

புதுக்கோட்டை: தமிழ்நாடு நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு கலை விழா முன்னிட்டு நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பல்வேறு வேடங்கள் அணிந்து பேரணியாகச் சென்றனர்.

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம்
தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம்

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு கலைவிழா மற்றும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி ஆனது புதுக்கோட்டை அரசு அலுவலக பொது வளாகத்திலிருந்து தொடங்கி, எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலை, கீழராஜ வீதி, வடக்கு ராஜவீதி வழியாக, திலகர் திடல் சென்றடைந்தது.

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் கலைவிழா

இந்த பேரணியில், மண்ணிசை பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம் மற்றும் லட்சுமி, சரஸ்வதி, பரமசிவம், பிள்ளையார் கருப்பசாமி உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்தும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாட்டுப்புற மேடை கலைஞர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்த நான்காம் ஆண்டு கலை விழாவில், தமிழக நாட்டுப்புற மேடை கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அதிமுக எம்.எல்.ஏ தூசி கே.மோகன் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details