இரும்பாநாடு கிராமத்தில் மேலேபாக்கம் குடியிருப்பில் வசித்துவந்த செல்லான் (60) இவர் உயிரிழந்தார். இறந்தவரின் உடலை ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பொது மயானத்தில் புதைப்பதற்காக எடுத்துச் செல்ல முற்படும்போது இந்தப் பொது மயானத்தில் அவர்களுக்குத் தனியாக ஒரு இடத்தைக் காண்பித்து இங்குதான் புதைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் தகராறு!
புதுக்கோட்டை: மேலபாக்கம் குடியிருப்புப் பகுதியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரசு அலுவலர்கள், அரசின் ஆவணங்களின்படி இந்த மயானம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பொது மயானம். எனவே குறிப்பிட்ட இடத்தில் புதைக்காமல் எங்கு வேண்டுமானாலும் புதைக்கலாம் எனக் கூறி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னார்கள்.
பின், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தினர். அதன் பின்பு இறந்தவரின் உடல் அடக்கம்செய்யப்பட்டது. இச்சம்பவத்தினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.