புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வேளாண்மைத் தொழில் மேலாண்மைத்துறையினர் சார்பில் உழவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் ஆவுடையார் கோவில் கடைவீதியில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தை அம்மா திட்டத்தலைவர் கூத்தையா, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் புதிய கருவிகளை எப்படி பெறுவது என்பது குறித்தும் வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் விளக்கமளித்து எடுத்து கூறினார்.
வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் வேளாண் உதவி இயக்குநர் ஜெயபாலன், வேளாண் அலுவலர் செல்வராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஐகுபர்அலி, வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:2 ஏக்கர் நிலம் திமுகவின் கண் துடைப்பு வேலை - எடப்பாடி பழனிசாமி தாக்கு!