பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் குடிக்காட்டைச் சேர்ந்தவர் சரவணன் (35) - அன்பரசி (31) தம்பதி. இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெரம்பலூர் வடக்குமாதவி சாலை எம்ஆர் நகரில் வசித்து வரும் இவர்களுக்கு ஹன்சிகா (4), மேகாஸ்ரீ (எ) கோமதி (ஒரு வயது) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு!
பெரம்பலூர்: குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வேளையில் நேற்று மாலை மீண்டும் நடந்த தகராறில் மனமுடைந்த அன்பரசி, தனது இரண்டாவது பெண் குழந்தையான மேகாஸ்ரீ-யை தூக்கிக் கொண்டு தனது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் மாலை 6 மணியளவில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து அன்பரசியை காப்பற்றியுள்ளனர்.
இதில் குழந்தை மேகாஸ்ரீ கிணற்றில் மூழ்கியதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்டனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் தாய் அன்பரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.