பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த காடூர் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அந்த காட்டுப்பாதையின் வழியே பொதுமக்கள் சென்றபோது, அழுகிய நிலையில் பெண்ணின் சடலத்தைக் கண்டுள்ளனர். உடனடியாக குன்னம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடூர் காவல்துரையினர், உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.