பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் மழை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் நந்தியம்பெருமாளுக்கு வருண ஜப விழா நடைபெற்றது.
மழை வேண்டி வருண ஜபம்!
பெரம்பலூர்: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மழை வேண்டி வருண ஜபம் நடைபெற்றது.
ருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இதில், விநாயகர் பூஜை சங்கல்பம் கலச ரசனையோடு ருத்ர ஜப ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர், அருள்மிகு அகிலாண்டேஸ்வரிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாக வேள்வி நடைபெற்றது.
பின்னர் நந்தியம்பெருமானுக்கு தொட்டில் அமைத்து தண்ணீர் நிரப்பி வருணஜபம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா மற்றும் செயல் அலுவலர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.