பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட சில கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்காக கடந்த 2007ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.
ஆந்திராவின் ஜிவிகே குழுமம் இந்திய அரசின் பெருவணிக துறையும் இணைந்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தினர். மேலும், இந்த நிலத்தில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதாகவும் ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதாகவும் கூறினர்.
இந்நிலையில், 13 ஆண்டுகளாகியும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவில்லை ஜிவிகே குழுமம் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே அப்பகுதி விவசாயிகள் தாங்கள் கொடுத்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய வேண்டுமென, இன்று திருமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.