சென்னையைச் சேர்ந்த ஸ்கேன் டெக்னீசியன்களான லட்சுமிகாந்தன், விஷ்ணுகுமார் மற்றும் டயானா இவர்கள் மூன்று பேரும் சென்னைையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றனர். திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலுார் அருகே மங்களமேடு பகுதியில் கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் சென்ற மூன்று பேரும் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளானவர்களில் லட்சுமிகாந்தன், விஷ்ணுகுமார் ஆகிய இருவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.