பெரம்பலூர்:குன்னம் பகுதியில் நீரோடை ஒன்றின் குறுக்கே கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் சுமார் ஏழடி நீளமுடைய கல்மரப் புதைபடிமம் ஒன்றும், அதைத்தொடர்ந்து ஓடை முழுவதும் பல்வேறு கடல்வாழ் தொல்லுயிரினப் புதைப்படிமங்களும் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன.
அப்போதே இந்த புதைப்படிமங்களை வருவாய் மற்றும் சுரங்கத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனிடையே ஓடையில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால் 7 அடி நீளமுள்ள அந்தக் கல்மரப் புதைபடிமம் சாலைக்கு அடியில் மண்ணில் புதைந்து காணாமல் போயுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
பழமையான கல்மரப் புதைபடிமம் இதைத்தொடர்ந்து நேற்று வருவாய் மற்றும் சுரங்கத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில்சென்று அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் கல்மரப் புதைபடிமத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய பணி இரவு 9 மணி வரை நீடித்தநிலையில் இறுதியில் புதையுண்டிருந்த 7 அடி நீளமுள்ள கல்மரப்படிமமும் சிதைவின்றி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இந்த கல்மரப் படிமத்தை மாவட்ட நிர்வாகம் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து காட்சிபடுத்தக்கோரிக்கை எழுந்துள்ளது .
இதையும் படிங்க : சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகல தொடக்கம்!