தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 3 ஆயிரம் பேர் போட்டி

பெரம்பலூர்: உள்ளாட்சித் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் மூன்றாயிரத்து 121 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

perambalur
perambalur

By

Published : Dec 20, 2019, 3:53 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு திரும்பப்பெறுதல் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் விவரம்:

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி

  • பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் என நான்கு வகைகளில் மொத்தம் பெறப்பட்ட மனுக்கள் இரண்டாயிரத்து 873
  • தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் 22
  • திரும்பப் பெறப்பட்டவை 268
  • போட்டியின்றி தேர்வு 213
  • கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் இரண்டாயிரத்து 370 பேர் களத்தில் உள்ளனர்

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி

  • பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் என நான்கு ஒன்றியங்களிலும் பெறப்பட்ட மனுக்கள் 657
  • தள்ளுபடி செய்யப்பட்டவை 6
  • திரும்பப் பெறப்பட்டவை 118
  • போட்டியின்றி தேர்வு 5
  • கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் களத்தில் மொத்தம் 428 பேர் போட்டி

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி

  • பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் என நான்கு ஒன்றியங்களில் பெறப்பட்ட மனுக்கள் 414
  • தள்ளுபடி செய்யப்பட்டவை 5
  • திரும்பப் பெறப்பட்டது 117
  • போட்டியின்றி தேர்வு யாருமில்லை
  • ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 292 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி

  • பெறப்பட்ட மொத்த மனுக்கள் 48
  • தள்ளுபடி செய்யப்பட்டவை 1
  • திரும்பப் பெறப்பட்டது 16
  • போட்டியின்றி தேர்வு யாருமில்லை
  • மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 31 பேர் களத்தில் உள்ளனர்.
    வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்காக தற்போது சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஒன்றியங்களில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு மொத்தம் மூன்றாயிரத்து 121 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: 'பெண்கள் வார்டா ஆண்கள் வார்டா'... குழம்பிய அலுவலர்கள்... தேர்தலை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details