தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் ஒருவாரம் முழு ஊரடங்கு - ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

பெரம்பலூர்: கரோனா வைரஸ் பரவலை தடுக்க வாலிகண்டபுரம் ஊராட்சியில் கடைகள் அடைக்கப்பட்டு ஒருவாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Perambalur Latest Corona Update
Perambalur Latest Corona Update

By

Published : Aug 14, 2020, 4:47 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஆக. 13) 31 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 839ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பின்படி வியாபாரிகள் சங்கம் ஒருமித்த கருத்தோடு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊராட்சியின் அனைத்து தெருக்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 607 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 221 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 11 பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details