பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ மீது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசியதாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அவர் மீது அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் அருள் தீண்டாமை வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே, கடந்த வாரம் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.