பெரம்பலூரிலிருந்து வேப்பூர் புறப்பட்ட அரசுபேருந்து, பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, முன்னால் சென்ற பைக் மீது மோதியது.
இதில், பேருந்தின் அடியில் சிக்கிய இருசக்கரவாகனம் சிலஅடிதூரம் இழுத்துச்செல்லப்பட்டது. பைக் ஓட்டுநருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
பிரேக் இல்லாத பேருந்து மோதி விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போக்குவரத்து பாதிப்பை சீர்செய்வதற்காக, பேருந்தை இயக்கும் போது பிரேக் பிடிக்காதது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், காயமடைந்தவர் களத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.