தமிழ்நாடு

tamil nadu

நெருங்குகிறது விநாயகர் சதுர்த்தி பண்டிகை- கலக்கத்தில் உற்பத்தியாளர்கள்

பெரம்பலூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட ஒருவார காலம் மட்டுமே உள்ள நிலையில், கொள்முதல் (ஆர்டர்) குறைந்துள்ளதால் சிலை உற்பத்தியாளர்கள், வியாபரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

By

Published : Aug 23, 2019, 8:17 AM IST

Published : Aug 23, 2019, 8:17 AM IST

உற்பத்தியாகும் சிலைகள்

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் மழையால் சிலை தயாரிப்புப் பணி தொய்வடைந்து காணப்படுவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் கொள்முதல்களும் குறைவாகவே வந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தயாரிக்கப்படுவதாக சிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தியாகும் சிலைகள்

ABOUT THE AUTHOR

...view details