தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தில் மோசடி

பெரம்பலூர்: கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தில் 1, 700 பேர் மோசடியாக பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கிசான்
கிசான்

By

Published : Sep 3, 2020, 8:23 PM IST

பிரதமரின் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதனிடையே கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசடி நடைபெற்றுள்ளது. அதேபோல பெரம்பலூர் மாவட்டத்திலும் மோசடி நடைபெற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், போலியான தகவல்களை அளித்து மோசடியாக நிதியுதவி பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மை துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் மாவட்டத்தில் 1, 700 பேர் 48 லட்சம் வரை மோசடியாக பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் போலியான தகவல் அளித்து மோசடியாக நிதி பெற்றவர்களின் வங்கிக் கணக்கு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை பணம் வரவு வைக்கப்பட்டால் திரும்ப பெறுகின்ற நடவடிக்கைகளையும் வேளாண் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details