பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றி கணக்கெடுத்து ஐந்து மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை, பிரதமர் வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், போன்ற பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்
பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்
மேலும், விவசாயிகள் தாங்கள் தூக்கத்தில் இருப்பதாகக் கூறி முக்காடு அணிந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் விவசாய மகளிர்கள் பலர் கலந்துகொண்டனர்.