தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உர விலையை ஒன்றிய அரசே நிர்ணயிக்க வேண்டும்'

உரத்தின் விற்பனை விலையை ஒன்றிய அரசே நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கம் சார்பில் துண்டு ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

formers_protest
formers_protest

By

Published : Jul 5, 2021, 10:33 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது,

1. உரத்தின் விற்பனை விலையை ஒன்றிய அரசே நிர்ணயிக்க வேண்டும், ஆண்டில் பலமுறை உர விலையை உயர்த்தக் கூடாது என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

2. தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் 2021 ஜனவரி 31வரை நிலுவையில் உள்ள பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

3. விவசாயத்தை பாதிக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details