பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்க சாலையை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக கழிவுநீர் சேமிப்பு தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கடும் துர்நாற்றத்துடன் வெளியேறி வரும் கழிவுநீரால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்!
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இரண்டு நாட்களாக வழிந்தோடும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்
இதனிடையே கழிவுநீர் தொட்டியை சரி செய்யும்படி நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் பார்க்கவும் இல்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நகராட்சி பகுதி புதை சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.