நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா மையமாக விளங்கும் கொல்லிமலையில் 63ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே 200 அடி பள்ளத்தாக்குப் பகுதியில், மரம் நட வனத்துறையினர் சென்றபோது, அங்குள்ள ஒரு மரத்தில் ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் தொங்குவதைக் கண்டனர்.
இதனையடுத்து வனத்துறையினர் வாழவந்திநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரின் தகவலை அடுத்து தடய அறிவியல் துறை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் தீபா, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவ்விடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.