தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊரடங்கில் நின்றுபோன டயர் ரீடிரேடிங் தொழில்'

நாமக்கல்: ஊரடங்கினால் தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அதனைச் சார்ந்துள்ள பல தொழில்கள் முடங்கியுள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள டயர் ரீடிரேடிங் தொழில் குறித்த சிறப்புத்தொகுப்பு.

tyre-retreading-industries-loss
tyre-retreading-industries-loss

By

Published : Jul 12, 2020, 7:17 PM IST

Updated : Jul 16, 2020, 5:52 PM IST

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதில் போக்குவரத்து தொடர்பான தொழில்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஊரடங்கினால் தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அதனைச் சார்ந்துள்ள டயர் ரீடிரேடிங் பட்டறைகள், லாரி பாடி கட்டும் பட்டறைகள், எந்திர பழுதுபார்ப்பு பட்டறைகள் உள்ளிட்டவைகள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.

அதன் காரணமாக அத்தொழில்களைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அதில் குறிப்பாக டயர் ரீடிரேடிங் தொழிலைச் சார்ந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட டயர் ரீடிரேடிங் பட்டறைகள் உள்ளன.

அதில் நாமக்கல்லில் மட்டும் 250க்கும் மேற்பட்ட ரீடிரேடிங் பட்டறைகள் உள்ளன. அதனைச் சார்ந்து 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மொத்தாமாக தமிழ்நாட்டில் மட்டும் இத்தொழில் மூலமாக ஆண்டுக்கு சுமார் 75 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுவந்தது.

ஆனால் தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக அந்த வர்த்தகம் 30 விழுக்காடு கூட நடைபெறவில்லை. ஏற்கனவே இத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அதிகளவில் வசூலித்துவருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு கூடுதல் சிரமத்தை அளித்துள்ளது. அதன்காரணமாக ரீடிரேடிங் தொழிலாளர்கள் ஜிஎஸ்டி வரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு டயர் ரீடிரேடிங் சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில் "சிறு, குறு தொழிலாக நடைபெற்று வரும் டயர் ரீடிரேடிங் பட்டறை தொழிலாளர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரமிழந்துள்ளனர். டயர் ரீடிரேடிங் மூலப் பொருளான ரப்பர் கேரளாவிலிருந்து லாரிகள் மூலம் தமிழ்நாடு வருவது வழக்கம். ஆனால் தற்போது அத்தியாவசியப் பொருள்களைத் தவிர மற்ற போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மூலப் பொருளை பெறமுடியவில்லை" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து டயர் ரீடிரேடிங் நிறுவன உரிமையாளர் ரவிசந்திரன் கூறுகையில் "ஊரடங்கில் டயர் ரீடிரேடிங் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்ததுள்ளனர். உரிமையாளர்களும் தொழிலுக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவருகிறோம். எனவே டயர் ரீடிரேடிங் உரிமையாளர்கள் கடன் வட்டியை தள்ளுபடி செய்து கடன் தவணை காலத்தை நீடிக்க அரசு உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஊரடங்கில் நின்றுபோன டயர் ரீடிரேடிங் தொழில்

இதுகுறித்து டயர் ரீடிரேடிங் தொழிலாளி தங்கராஜ் கூறுகையில் "ஊரடங்கால் டயர் ரீடிரேடிங் வேலை வாரத்தில் 2 அல்லது 3 நாள்களுக்கு மட்டுமே உள்ளது. அதனால் குறைந்த வருமானம்தான் கிடைக்கிறது. அதைவைத்துப் பிழைப்பு நடத்திவருகிறோம். அதுவும் லாரிகள் இயங்கினால்தான். வருமானமின்றி தவித்துவருகிறோம். எனவே அரசு எங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். லாரிகள் தொடர்பான தொழிலில் முக்கிய பங்காற்றும் டயர் ரிடிரேடிங் தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: நாமக்கல் - கரூர் எல்லை மூடல்: இ-பாஸ் இல்லாமல் வருவோருக்கு அனுமதி மறுப்பு

Last Updated : Jul 16, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details