பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரிலிருந்து சின்னு என்பவர் லோடு ஏற்றுவதற்காக ஈரோடு சென்று கொண்டிருந்தார். அதேசமயம் ஈரோட்டிலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு, திருச்செங்கோடு நோக்கி பழனிச்சாமி என்பவர் தனது லாரியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இரு லாரிகளும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தொட்டிபாளையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு லாரியின் ஓட்டுநரான பழனிச்சாமி, படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.