தமிழ்நாடு

tamil nadu

'இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்க டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க வேண்டும்'

டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க, கடை நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள், பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

By

Published : Jan 27, 2021, 9:05 AM IST

Published : Jan 27, 2021, 9:05 AM IST

டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க வேண்டும்
டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க வேண்டும்

நாமக்கல்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லை அடுத்த புதன்சந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன், "தமிழ்நாடு டாஸ்மாக் கடையில் கடந்த 18 ஆண்டு காலமாக, தற்காலிக ஒப்பந்த தொகுப்பு ஊதியத்தில் 36 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுவதால், இரவு நேரங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களும், கொள்ளைகளும் டாஸ்மாக் கடைகளில் நடைபெறுகின்றன. இதனால் கடை செயல்படும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு பண பெட்டகத்தை அமைக்கும் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணமில்லா மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு காப்புகாட்டிற்குள் பாதை அமைத்த கேரள நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details