நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாவடிதெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக பரமத்தி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டதில் வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், இரண்டு ஆண்களை கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், பரமத்தி வேலூரைச் சேர்ந்த கெளரி (42), கொடுமுடியைச் சேர்ந்த சதாசிவம், தென்னிலையைச் சேர்ந்த சுப்பிரமணி என்பதும், ஒரு மாதமாக கெளரியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் கண்டறிப்பட்டது. மேலும் சதாசிவம், சுப்பிரமணி இருவரும் அப்பகுதியில் பல பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.