கரனோ வைரஸ் பலநாடுகளில் தீவிரமாகப் பரவி அச்சுறுத்திவருகிறது. இதனையடுத்து இந்தியாவிலும் பல மாநிலங்களில் இந்த வைரசின் தாக்கம் பரவத் தொடங்கியுள்ளதால், நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அரசு உத்தரவை மீறி ராசிபுரத்தில் உள்ள சில மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.), மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டுவருகின்றன. பெற்றோர்களும் ஆபத்தை உணராமல் வழக்கம்போல் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவருகின்றனர்.
உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க:லிப்ட் மூலம் கொரோனா தொற்றா...? வாய்ப்பே இல்லை - ஜான்சன் நிறுவன மேலாளர்