நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வடகரையாத்தூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்கு அங்காளம்மன் கோயிலில் ஊர் மக்கள் நான்கு தலைமுறைகளாக வழிபட்டும், கோயிலை பராமரித்தும் வருகின்றனர். இந்த கோயிலில் தங்கி பூசாரியாக பணியாற்றி வரும் முத்துசாமி என்பவர் கோயிலையும் அதன் சுற்றியுள்ள நிலங்களையும் தனது பெயருக்கு பட்டா வாங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பூசாரியிடம் கேட்டபோது கோயில் நிலம் தனக்கு சொந்தமானது எனவும் ஊர்மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடகரையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.