தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொருளாதார கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளவர்களுக்கு ஒருநாள் பயிற்சி

நாமக்கல்: மாவட்டத்தில் நகராட்சிப் பகுதியில் பொருளாதார கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ள 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

பொருளதார கணக்கெடுப்பு  நாமக்கல் மாவட்டச் செய்திகள்  7th economic survey  nammakal news
பொருளாதார கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளவர்களுக்கு ஒருநாள் பயிற்சி

By

Published : Feb 20, 2020, 3:25 PM IST

நாட்டின் ஏழாவது பொருளாதார கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. அந்தந்த மாவட்ட புள்ளியில் துறையின் வழியாக மின்னனு தொழில்நுட்ப முறையில் மொபைல் ஆப் மூலம் பணிகள் நடைபெறவுள்ளன. இதன்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வீடுவாரியாகச் சென்று இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

முதல் கட்டமாக நாமக்கல் நகராட்சியில் கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ள 200க்கும் மேற்பட்டோருக்கான ஒருநாள் பயிற்சி நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், பொதுச்சேவைத் துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கவாசகம், மாவட்ட புள்ளியில் துறை உதவி இயக்குநர் லஷ்மணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு களப்பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினார்.

பொருளாதார கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளவர்களுக்கு ஒருநாள் பயிற்சி

அப்போது பேசிய அவர், ”பொருளாதார கணக்கெடுப்பின்போது குடும்ப அட்டையில் உள்ளவர்களின் முழு விவரங்களைப் பெறவேண்டும். அதேபோல், குடும்பத்தினர் செய்யும் தொழில் குறித்த விவரங்களைச் சேகரிப்பதோடு, வீட்டிலுள்ள மின்சாதனங்கள், எரிவாயு இணைப்புகள், வாகனங்களின் விவரங்கள், வீடு உள்ளிட்ட கட்டுமான விவரங்கள், ஆண்டு வருமானம், மூலதனம் உள்ளிட்ட விவரங்களை முழுமையாகச் சேகரித்திட வேண்டும்” என அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:அவினாசி கோர விபத்து: உயிரிழப்பு 20ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details