தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு மின் இணைப்பு' - அமைச்சர் தங்கமணி தகவல்

நாமக்கல்: கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 7 லட்சம் பேருக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நாமக்கலில் புகைப்பட கண்காட்சி
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நாமக்கலில் புகைப்பட கண்காட்சி

By

Published : Feb 29, 2020, 7:14 PM IST

நாமக்கல் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மூன்று ஆண்டு சாதனைகளை விளக்கும் விதமாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து அனல்மின் நிலையங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 7 லட்சம் பேருக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாமக்கலில் புகைப்படக் கண்காட்சி

வட சென்னை அனல் மின்நிலையம் மூடப்படும் நிலையில் உள்ளதால் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இடமாறுதல் வழங்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து பேருந்து நிலைய பயணிகளுக்கு அரசின் மூன்றாண்டு திட்ட கையேட்டை அவர் வழங்கினார்.

இதையும் படிங்க: 'இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்!

ABOUT THE AUTHOR

...view details