நாமக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற மூலிகை சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
8 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் கொல்லிமலை சுற்றுலா தலங்கள்!
நாமக்கல்: கரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வின் அடிப்படையில் 8 மாதங்களுக்குப் பிறகு கொல்லிமலை சுற்றுலா மையங்களைத் திறக்க நாமக்கல் ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில் கரோனா கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில் 8 மாதங்களுக்குப் பிறகு நாளை (நவ. 12) முதல் கொல்லிமலையில் உள்ள சுற்றுலா மையங்களை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆகாய கங்கை, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் திறக்கப்படவுள்ளது. அங்குவரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல் விதிமுறைகளையும் பின்பற்றபடுகின்றனவா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.