நாமக்கல் மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கிவருகிறது. கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், வியூ பாயிண்ட், மாசிலா அருவி, ஆகாய கங்கை உள்ளிட்ட இடங்கள் முக்கியச் சுற்றுலா மையங்களாக உள்ளன.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும்பொருட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி கொல்லிமலையில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடிமகன்கள் சுற்றுலா மையங்களில் சட்டவிரோதமாக மது அருந்தியும், அங்கேயே மதுபாட்டில்கள், நெகிழிக் குப்பைகளை வீசிச் செல்வதால் சுற்றுலா மையங்கள் அசுத்தம் நிறைந்து சுகாதாரமின்றி காணப்படுகின்றன.
மேலும் சுற்றுலா மையங்கள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே உடனடியாக அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுத்து மது அருந்துவதைத் தடுத்து சுற்றுலா மையங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு மீறல்: 1500க்கும் மேற்பட்டோர் கைது!