தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடி மருந்து ஏற்றி வந்த லாரி விபத்து: வெடிப்பொருள்கள் சேதமாகததால் பெரும் விபத்து தவிர்ப்பு

நாமக்கல்: வெடி மருந்து ஏற்றி வந்த லாரி மற்றொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெடி பொருள்கள் ஏதும் சேதம் அடையாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

truck
truck

By

Published : May 12, 2020, 7:02 PM IST

ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து காரைக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சக்தி வாய்ந்த 10 டன் எடை கொண்ட வெடி மருந்துகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரி நாமக்கல் அடுத்த களங்காணி அருகே வந்துகொண்டிருந்தபோது திருப்பதியிலிருந்து பி.வி.சி பைப்களை ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது

இதில் வெடி மருந்து ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தாலும் வெடிப்பொருட்கள் ஏதும் சேதம் அடையாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

விபத்து குறித்து அறிந்த புதுசத்திரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரிகளை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details