நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள வெப்படை பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மகன் மணிவண்ணன்(40), 12ஆம் வகுப்பு படித்த இவர் எடப்பாடி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 26 ஆண்டுகள் கம்பவுண்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக பணிக்கு செல்லாமல் இருந்த மணிவன்னன், வெப்படை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்து வந்துள்ளார்.
நாமக்கல் அருகே போலி மருத்துவர் கைது!
நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள், கம்பவுண்டர் வேலை பார்த்த ஒருவர் இப்பகுதியில் போலி டாக்டராக மருத்துவம் பார்ப்பதாக எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அளித்த தகவலின் அடிப்படையில், எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மணிவண்ணன் அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியின் உத்தரவின்பேரில், குமாரபாளையம் தலைமை மருத்துவர் அருண், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலி டாக்டராக வேலை பார்த்த மணிவண்ணனை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.