நாமக்கல் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன், 'உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால்தான் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், கேஸ் விலை உயர்வால் பெண்களும், தேர்வு கட்டணம் உயர்வால் மாணவர்களும் என அனைத்து தரப்பிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினி கூறியதில் என்ன பிழை கண்டீர் - ஈஸ்வரன்
நதிநீர் இணைப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தது பொதுவான கருத்து. இது பாஜகவிற்கு ஆதரவான கருத்து இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுக அமைச்சர்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது என கூறி வருகின்றனர். ஏதோ பிரதமர் மோடி எல்லையில் துப்பாக்கி வைத்து தாக்கத் தயாராக இருப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் மக்கள் பாஜக மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மோடி இந்த ஐந்தாண்டு ஆட்சியில் என்ன செய்தார் என்பதை சொல்லத் தயாரா?
பாஜகவின் நதிநீர் இணைப்பு அறிக்கைக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தது பொதுவான கருத்து. இதனால் பாஜகவிற்கு ரஜினி மறைமுகமாக ஆதரவளித்துள்ளார் என கருதமுடியாது. பாஜக அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளுக்குள் அதிகம் முரண்பாடுகள் உள்ளன. இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, வியாபார நோக்கில் சேரப்பட்ட கூட்டணி என்று அவர் விமர்சித்தார்.