தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் முட்டை மற்றும் கறி கோழி விலை குறைவு

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 20 காசு குறைத்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கலில் முட்டை விலை குறைவு
நாமக்கலில் முட்டை விலை குறைவு

By

Published : Feb 21, 2021, 11:42 AM IST


கடந்த 15ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், ”நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், கேரளா மற்றும் தமிழகத்தில் முட்டை விற்பனை குறைந்ததாலும், முட்டை விலை குறைந்ததாக தெரிவித்தனர். மேலும், வரும் காலங்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் கறி கோழி விலையும் கடந்த 2 நாள்களில் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி கறி கோழி விலை உயிருடன் ஒரு கிலோ 88 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஐந்து ரூபாய் குறைந்து 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details