தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்டாலின் அரசியலுக்காக ஆணையம் பற்றி பேசிவருகிறார்' - அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: பரமத்தியில் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்ட மின் துறை அமைச்சர் தங்கமணி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலுக்காக ஆணையம் பற்றி பேசிவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிசம் பேசிய அமைச்சர் தங்கமணி
செய்தியாளர்களிசம் பேசிய அமைச்சர் தங்கமணி

By

Published : Feb 27, 2020, 6:07 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு 10 கோடியே 93 லட்சத்தில் புதியதாகக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், கலந்துகொண்ட மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என நாங்கள் கூற முடியாது. ஆணையத்திற்கு எவ்வளவு நாள்கள் வேண்டுமோ அவ்வளவு நாள்கள் எடுத்துக்கொண்டு அறிக்கை வழங்குவார்கள்.

பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்த அரசைப் பற்றி குறை கூறுவதற்காக ஏதாவது ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டு தேவையில்லாமல் ஆணையம் பற்றி அரசியலுக்காகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைப்பது குறித்து முதலமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். மாநில அரசுக்கே மண்டலம் அமைக்க அதிகாரம் உள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுப்பதற்கு மாநில அரசே வழங்கிக் கொள்ளலாம் எனச் சட்டத்தை ஆராய்ந்துதான் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'செய்ய முடியாததையும் செய்து காட்டியவர் ஜெயலலிதா' - அமைச்சர் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details