நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சிக்குட்பட்ட சுப்பையாம்பாளையம், செஞ்சுடையாம்பாளையம், பஞ்சப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சப்பாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், அழுகிய முட்டைகளை உயிரியல் பாதுகாப்பு முறையில் அப்புறப்படுத்தாமல், திறந்தவெளியில் சாலையோரமாக கொட்டி மலை போல் குவித்து வைத்துள்ளனர்.
இந்நிலை தொடர்ந்து நிலவி வருவதால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கோழிகளை சாலையோரத்தில் வீசிச்சென்றுள்ளதால் கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக எண்ணி அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சாலையோரம் கொட்டி கிடக்கும் கோழிகள் மேலும், இந்த விவகாரத்தில் அலுவலர்கள் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 20 ரூபாய்க்கு விற்பனையாகும் கறிக்கோழி!