மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 12ஆம் தேதி முதல் ரூ.147 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும் சமையல் எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் எரிவாயு உருளை ரூ.734-லிருந்து ரூ.147 வரை உயர்த்தப்பட்டு தற்போதைய விலை ரூ.881-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
நாமக்கல்
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பூங்கா சாலையில் விலை உயர்வைக் கண்டித்து சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர்
அதேபோல் அரியலூர் மாவட்டத்திலுள்ள அண்ணா சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு உருளைகளை தலையில் தூக்கிவந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரி
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் அதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை உடனே திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து குமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும், உருளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விறகு அடுப்பு வைத்து அதில் மாலை அணிவிக்கப்பட்ட எரிவாயு உருளையை வைத்து நூதனமான முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் விழுப்புரம்
எரிவாயு உருளை விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆர்.டி.வி. சீனுவாசகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இதையும் படிங்க: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு - கும்மியடித்து பெண்கள் போராட்டம்